‘ஐ யம் பேக்…’ அஜித்தின் வேதாளம் டீசர் ஸ்பெஷல்!


‘ஐ யம் பேக்…’ அஜித்தின் வேதாளம் டீசர் ஸ்பெஷல்!

‘சிறுத்தை’, ‘வீரம்’ படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் ‘சிவா ’ படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம்கூட முழுமையாக இல்லாத நிலையில் படக்குழுவினர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் ‘புலி’ வெளியாகிய அக்டோபர் 1ஆம் தேதி ‘வேதாளம்’ பட டீசர் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அக்டோபர் 8ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்ற செய்தி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை பார்த்த சிலர் அதனை பற்றி தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு பாடல் எழுதிய மதன் கார்க்கி இதனை பாராட்டியதை பற்றி நாம் தெரிவித்திருந்தோம். தற்போது டீசரைப் பற்றி இன்னும் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

இதில் ‘I am back” என்ற வசனம் இடம்பெற்றுள்ளதாம். அஜித்தின் ‘பில்லா’ வில் இப்படியொரு வசனம் இடம்பெற்றது இங்கே நினைவு கூறத்தக்கது. மேலும் இதில் அனிருத்தின் பின்னணி இசை மிகுந்த வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. இந்த டீசர் 48 வினாடிகள் ஓடக்கூடியது.

இப்படத்தில் தம்பி ராமையா பார்வையற்றவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.