அஜித்தான் அடுத்த ரஜினி; பிரபல பத்திரிகை கணிப்பு!


அஜித்தான் அடுத்த ரஜினி; பிரபல பத்திரிகை கணிப்பு!

இந்திய திரையுலகில் மொழி வாரியாக நிறைய சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் ரஜினிகாந்த் இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக போற்றப்பட்டு வருகிறார். இதனை வட இந்திய ஊடகங்களும் அடிக்கடி உறுதிசெய்து வருகின்றன. இதனிடையில் தமிழ் சினிமாவில் அடுத்த ரஜினி யார்? என்ற போட்டி காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தன் திரையுலக பயணத்தில் நேற்றோடு 23 வருடங்களை கடந்து விட்டார் அஜித். இந்த நிகழ்வை விதவிதமாக கொண்டாடி தீர்த்தனர் தல ரசிகர்கள். பேனர், போஸ்டர் அடித்து பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் இணைய ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர். இதனை தொடர்ந்து வட இந்திய முன்னணி பத்திரிகை ஒன்று நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கை பற்றிய ஒரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரையில் அஜித்தான் அடுத்த ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருந்தது. இதனையறிந்த அஜித் ரசிகர்கள் ‘தல’ கால் புரியாமல் கொண்டாடி வருகின்றனர்.