சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் தல அஜித்!


சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் தல அஜித்!

‘என்னை அறிந்தால்’ வெற்றியைத் தொடர்ந்து அண்மையில் வெளியான அஜித்தின் ‘வேதாளம்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி திருநாளில் வெளியான இப்படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளாவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம்.

மேலும் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. மலேசியாவில் மட்டும் இதுவரை ரூ. 11 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் மட்டும் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

மலேசிய பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களே என்றும் முன்னணியில் இருந்து வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் மற்றும் சிவாஜி ஆகிய இரண்டு படங்களும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. அஜித்தின் ‘வேதாளம்’ தற்போது மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.