தல அஜித்துக்கு கத்து கொடுத்ததே தலைவர் ரஜினிதான்!


தல அஜித்துக்கு கத்து கொடுத்ததே தலைவர் ரஜினிதான்!

முன்பெல்லாம் நாம் திரையில் பார்க்கும் சினிமா நட்சத்திரங்கள் நிஜத்திலும் சிறிதளவு ஒப்பனையுடன் இருப்பார்கள். காரணம் ஒப்பனை இல்லாமல் இருந்தால் நிஜத்தில் தன் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்பதால்தான்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியோ… தன் ரியல் லைஃப் வேறு…. தன் ரீல் லைஃப் வேறு என்று வேறுபடுத்தி காட்டுபவர். நடிகர் என்றொரு பந்தா இல்லாமல், தலையில் விக் எதுவும் வைக்காமல் பொது நிகழ்ச்சிகளில் தன் நிஜத் தோற்றத்தில் தோன்றி வருகிறார். தன் குருநாதர் கே. பாலசந்தர் சொன்னதுபோல் சினிமாவில் மட்டுமே நடித்து வருபவர் இவர்.

இந்நிலையில் அஜித் பெரும்பாலும் அவரது படங்களில் நிஜத்தில் உள்ளது போல சால்ட் அண்ட் பெப்பர் லுக் தலையுடன் நடித்து வருகிறார். எனவே, சினிமாவிலும் இமேஜ் பார்க்காதவர் எங்கள் ‘தல’ மட்டுமே என அஜித் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதனிடையில் ரஜினியின் ‘கபாலி’ படத்தின் புகைப்படங்கள் வெளியானபோது ‘தலைவர் ரஜினியும் எங்கள் தல அஜித் போல நடிக்க வந்துவிட்டார்’ என்று அஜித் ரசிகர்கள் கூறி வந்தனர்.

இதனால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள்.. ‘யாரைப் பார்த்து யார் காப்பியடிப்பது? இந்த ட்ரெண்ட்டை முதலில் ஆரம்பித்து வைத்தவரே எங்கள் ‘தலைவர்’ ரஜினிதான். உங்க ‘தல’ அஜித்துக்கும் நிஜ வாழ்க்கையில் நடிக்க வேண்டாம் என கற்றுக் கொடுத்தவர் அவர்தான்… என்று 20 வருடங்களுக்கு முன்பே வந்த ‘வள்ளி’ படத்தில் உள்ள ‘வீரைய்யா’ ரஜினி ஸ்டில்லை வெளியிட்டு வருகின்றனர்.