அஜித்தை இயக்குகிறாரா?… ‘ப்ரண்ட்ஸ்’ பட இயக்குனர் விளக்கம்!


அஜித்தை இயக்குகிறாரா?… ‘ப்ரண்ட்ஸ்’ பட இயக்குனர் விளக்கம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான அஜித்தின் ‘வேதாளம்’ ஒருவழியாக தீபாவளிக்கு வெளியானது. படமும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் நடிப்பிற்கும் படத்திற்கு நல்ல விமர்சனங்களை வந்துள்ளதையடுத்து அஜித்தின் அடுத்த படம் என்ன? படத்தை இயக்குபவர் யார்? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.

இதனிடையில் மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படத்தை பிரபல இயக்குனர் சித்திக் இயக்கியிருந்தார். இவர் இதற்கு முன்பே தமிழில் விஜய் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இவரே இயக்கக்கூடும் எனத் தகவல்கள் வந்தன. அதில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடிக்கக்கூடும் எனவும் கூறப்பட்டது. இதுகுறித்து அஜித் மற்றும் நயன்தாரா தரப்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே இயக்குனர் சித்திக் இது குறித்து கூறியதாவது…

‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை தமிழிலும், ஹிந்தியிலும் ரீமேக் செய்யவிருப்பது உண்மைதான். ஆனால் அஜித் தரப்பிலிருந்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. என்னுடைய அடுத்த மலையாள படத்தை இயக்கும் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறேன். அது முடிந்த பிறகு தான் அடுத்தபடம் பற்றி யோசிப்பேன்” என்றார்.