விஜய்யை முந்தி கோலிவுட்டை ஆச்சரியப்படுத்திய அஜித்..!


விஜய்யை முந்தி கோலிவுட்டை ஆச்சரியப்படுத்திய அஜித்..!

மங்காத்தா தொடங்கி அதிரடி ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அஜித்.

2013ஆம் ஆண்டில் ஆரம்பம், 2014ஆம் ஆண்டில் வீரம் மற்றும் கடந்த 2015ஆம் ஆண்டில் என்னை அறிந்தால் மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.

தொடர்ந்து அதிரடியான வெற்றிகளை கொடுத்து வருவதால் அஜித்தின் சம்பளமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஜித்.

இப்படத்திற்காக அஜித்துக்கு ரூ. 40 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘தெறி’ படத்திற்காக ரூ. 25 கோடி சம்பளத்தை விஜய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யை விட அஜித் அதிக சம்பளம் பெறுவது கோலிவுட்டை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.