ஒரே நாளில் சூர்யாவை முந்தும் அஜித்!


ஒரே நாளில் சூர்யாவை முந்தும் அஜித்!

விஜய்-சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதுபோல விஜய்-அஜித் இணைந்து நடித்துள்ளனர். இவர்களைப் போல் சூர்யா-விக்ரம் இணைந்து நடித்துள்ளனர். அதுபோல விக்ரம்-அஜித்தும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அஜித் மற்றும் சூர்யா இதுவரை இணைந்து நடித்ததில்லை. இவர்கள் ஒருமுறையாவது இணைந்து நடிக்க மாட்டார்களா? என இருதரப்பு ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித்-சூர்யா ஆகியோரது பட பாடல்கள் ஒரே நாளில் வெளியாகும் நிலையில் இருந்தது. ஆனால் இதில் சூர்யாவை முந்தி அஜித் வந்துவிட்டார்.

அஜித்தின் ‘வேதாளம்’ பாடல்கள் வருகிற 16ஆம் தேதி அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளில் வெளியாகிறது. மேலும் வெகுவிரைவில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள தர லோக்கலான ஒரு பாடல் டீசரை வெளியிடவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘பசங்க 2’ படத்தின் பாடல்களை அக். 17ஆம் தேதி வெளியிடவுள்ளனர். மேலும் அன்றைய தினமே படத்தின் ட்ரைலரை காலை 11 மணியளவில் யுட்யூபில் வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.