வியாழக்கிழமை சென்டிமெண்டை விடாத ‘தல’ அஜித்..!


வியாழக்கிழமை சென்டிமெண்டை விடாத ‘தல’ அஜித்..!

தன் படம் தொடர்பான எந்தவொரு காரியத்தையும் வியாழக்கிழமை செய்வதையே சென்டிமெண்டாக வைத்துள்ளார் அஜித்.

கடந்த வருடம் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த, வேதாளம் படத்தின் அனைத்து விஷயங்களையும் வியாழக்கிழமை வெளியாகுமாறு பார்த்துக் கொண்டார்.

அப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் என அனைத்தும் வியாழக்கிழமை வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படமான தல 57 பட தொடர்பான அக்ரிமெண்டையும் இன்று (மே 5, 2016) கையெழுத்திடுகிறார்.

மேலும் படத்தில் பணியாற்றவுள்ள சிவா, அனிருத் ஆகியோருக்கு இன்று அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறதாம்.

இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.