குட்டி தல பெயர் ‘ஆத்விக்'; அப்படின்னா என்ன தெரியுமா?


குட்டி தல பெயர் ‘ஆத்விக்';  அப்படின்னா என்ன தெரியுமா?

சரண் இயக்கத்தில் ‘அமர்க்களம்’ படத்தில் ஒன்றாக நடித்தபோது அஜித் ஷாலினி இருவரும் காதலிக்க தொடங்கினர். கடந்த ஏப்ரல் 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து  அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #KuttyThala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் அன்று ட்ரெண்ட்டானது.

இதுநாள் வரை அக்குழந்தைக்கு என்ன பெயரிட்டு இருக்கிறார்கள் என்பது வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது. தற்போது அந்த ஆண் குழந்தைக்கு ‘ஆத்விக்’ என்று பெயரிட்டு இருப்பதாக அஜித் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘ஆத்விக்’ என்றால் தனித்துவமானவன் என்று பொருள் கொள்ளப்படும்.

இதுக்கும் ஒரு ட்ரெண்ட் உருவாக்கி விடுவார்களோ தல ரசிகர்கள்…