விஜய்யின் ‘புலி’யுடன் மோதும் அஜித் பாடல்!


விஜய்யின் ‘புலி’யுடன் மோதும் அஜித் பாடல்!

விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ட்ரைலரை வருகிற 20ஆம் தேதியும் படத்தை செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடவுள்ளனர்.

இதே நாளில் பாபி சிம்ஹா நடித்துள்ள ‘கோ-2’ படம் வெளியாகிறது. இப்படத்தில் பாபி சிம்ஹாவுடன் முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தேசிய விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிக்கி கல்ராணி, பாலா சரவணன் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சரத் இயக்கியுள்ளார். ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த இருபடங்களுடன் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரியான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற படமும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா, அனிதா ரெட்டி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராமலிங்கம் என்பவர் இயக்கியிருக்கிறார்.

விஜய்யின் ‘புலி’ படம் வெளியாகும் நாளில் இந்தப் படங்களும் வெளியாவதால் இப்படங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.