அஜித்தின் ‘வேதாளம்’ படைத்து வரும் சாதனைகள்!


அஜித்தின் ‘வேதாளம்’ படைத்து வரும் சாதனைகள்!

சில வருடங்களுக்கு முன் தோல்வி படங்களை அஜித் கொடுத்தபோதே அவரை விட்டு விலகாதவர்கள் அவரது ரசிகர்கள். தற்போது ‘ஆரம்பம்’, ‘வீரம்’, ‘என்னை அறிந்தால்’ என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். பிறகென்ன விட்டுவார்களா என்ன? ‘தல’யில் வைத்து கொண்டாடி அஜித்தின் ‘வேதாளம்’ படத்திற்கு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ‘வேதாளம்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது வெளியான ஒரு மணி நேரத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் உலக சாதனை படைத்தை நாம் அறிந்தோம். இதுவரை ‘டீசரை 4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 1,25,000க்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளார்களாம்.

இதனைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்றுள்ள ‘லுமா டோலுமா‘  பாடலின் டீசர் நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியானது. ஒரு நாள்கூட முடிவடையாத நிலையில் இதுவரை 2,70,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதற்குள்ளாக 32,000 பேர் லைக்கும் செய்துள்ளனர். எனவே, இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் நாளை படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.