ஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..!


ஏமாற்றுவதே இவங்களுக்கு வேலையா போச்சு… கடுப்பில் அஜித் ரசிகர்கள்..!

வேதாளம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் இணையவுள்ளனர்.

தற்காலிகமாக தல 57 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல்களை சமூக வலைத்தளத்தில் இந்த தளத்தில் பார்க்கலாம் என்றும், அவை இன்று மாலை மிகச்சரியாக 5 மணி 7 நிமிடத்தில் வெளியிட போவதாக அறிவித்து இருந்தனர்.

தற்போது அதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் அதில் ஒன்றுமில்லை. தகவல்களை வேறு ஒரு தேதியில் வெளியிடுகிறோம் என்ற தகவலும் கூடவே மன்னிப்பு மட்டுமே உள்ளது.

இதற்கு முன்பு வேதாளம் படத்தின் போதும் இப்படியாக ரசிகர்களை காத்திருக்க வைத்து ஏமாற்றி வந்தனர். இது அஜித் படங்களில் தொடர்கதையாகி வருவதால் ரசிகர்கள் டென்ஷனாக இருக்கிறார்கள்.

ஒன்று அறிவிப்பை வெளியிடாமல் இருக்கவேண்டும். அல்லது முடியவில்லை என்றால் முன்பே அறிவிக்கவேண்டும். கடைசி நொடி வரை காத்திருக்க வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என்றும் கேள்விகளை கேட்கின்றனர்.

சத்யஜோதி நிறுவனம் தற்போது பகிர்ந்துள்ள ஸ்கீரின் ஷாட் இதோ…

Ajith 57 Update