ரஜினி-விஜய், விக்ரம்-தனுஷை தொடர்ந்து அஜித்துடன் இணையும் நடிகை..!


ரஜினி-விஜய், விக்ரம்-தனுஷை தொடர்ந்து அஜித்துடன் இணையும் நடிகை..!

வீரம் மற்றும் வேதாளம் ஆகிய இரு வெற்றிப்படங்களை தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக டி.தியாகராஜன் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் சமீபத்தில் அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி வேட்டை வெகு நாட்களாக நடைபெற்று வருகிறது.

அஜித்துடன் இணையும் அந்த முன்னணி நடிகை யார்? என்ற கேள்வி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நாயகி பட்டியலில், அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா ஆகியோர் உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது எமி ஜாக்சனும் இணைந்திருக்கிறாராம்.

இவர் சமீபத்தில்தான் அஜித்துடன் நடிக்க காத்திருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விக்ரமுடன் ஐ, விஜய்யுடன் ‘தெறி’, தனுஷுடன் தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்தில் நடித்து வருகிறார்.