விஜய்க்கு ப்ருத்விராஜ்… அஜித்துக்கு துல்கர் சல்மான்..!


விஜய்க்கு ப்ருத்விராஜ்… அஜித்துக்கு துல்கர் சல்மான்..!

அஜித், விஜய் படங்களுக்கு தமிழகத்தை தாண்டியும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே இவர்களின் படங்களின் ஆந்திர, கேரள நடிகைகளின் பங்களிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

கேரளாவில் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கையில் கருத்தில் கொண்டு ‘பாவாட’ திரைப்படத்தில் விஜய் ரசிகராக நடித்தார் ப்ருத்விராஜ். இக்காட்சிக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

இந்நிலையில், அண்மையில் வெளியான துல்கர் சல்மானின் களி (Kali) படத்தில் அஜித் ரசிகர்களுக்கான காட்சியை வைத்துள்ளனர்.

வேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடல் காட்சியை இப்படத்தில் இடம்பெறும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளனர். இதற்கு ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைத்ததாம்.