அஜித்-விஜய்க்கு விஷாலுடன் ஈகோ பிரச்சினையா..? கொதிக்கும் கோலிவுட்..!


அஜித்-விஜய்க்கு விஷாலுடன் ஈகோ பிரச்சினையா..? கொதிக்கும் கோலிவுட்..!

நேற்று நடைபெற்ற நட்சத்திர கூட்டத்திற்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. இதற்கு பல எதிர்ப்புகள் வெளியில் இருந்து வந்தாலும், திரையுலகில் இருக்கும் சிலரே வராமல் போனதால்தான், ரசிகர்களும் இந்த நிகழ்வை தவிர்த்தாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

திரையுலகில் ஜாம்பவான்கள் என்று வர்ணிக்கப்படும் ரஜினியும் கமலும் தங்கள் முழு ஆதரவை கொடுத்தனர். தெலுங்கு திரையுலகிலிருந்து நாகார்ஜூனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா என மும்மூர்த்திகளும் வந்திருந்தனர்.

மேலும் கேரளாவிலிருந்து மம்மூட்டி, கன்னட சினிமாவின் புனித் ராஜ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆனால் சென்னையில் இருந்து கொண்டே கிரிக்கெட் போட்டிக்கு வராமல் தவிர்த்த விஜய், அஜீத் மீது கடுங்கோபத்தில் இருக்கிறதாம் நடிகர் சங்கம்.

இப்போது இருக்கும் நடிகர் சங்க நிர்வாகிகளில் பலரும் இளைஞர்களே. நலிந்த கலைஞர்களுக்குக்காக பல திட்டங்களை இவர்கள் தீட்டி வருகின்றனர்.

இதனால் விஷால், கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடும் என்பதால் அஜித், விஜய் ஈகோ பார்க்கிறார்கள் என்றும் கோலிவுட்டில் செய்திகள் வலம் வருகின்றன.

விஜய்யை பல முறை அழைத்தும், அவர் வர முயற்சி செய்கிறேன் என்று சொன்னாராம். ஆனால் அஜித்தோ அழைப்பிதழையே வாங்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் கலைக்கும் வரை இதற்கான உரிய விடை கிடைக்கப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.