அஜித், விஜய் படங்களுடன் ‘மாயவன்’ கனெக்ஷன்..!


அஜித், விஜய் படங்களுடன் ‘மாயவன்’ கனெக்ஷன்..!

‘சூதுகவ்வும்’, ‘முண்டாசுபட்டி’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி. குமார், தற்போது ‘மாயவன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை எழுத, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஒளிப்பதிவுக்கு கோபி அமர்நாத், இசைக்கு ஜிப்ரான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சந்தீப் கிஷன் மற்றும் லாவண்யா திரிபாதி ஜோடியாக நடிக்க, டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், மைம் கோபி, பாபு ஆண்டனி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் விஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் ஆரம்பம் படங்களில் நடித்த அக்ஷரா கௌடா முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சி பாட்டுக்கு இவர் நடனம் ஆடி அசத்தியது தங்களுக்கு இன்னும் நினைவிருக்கலாம்.