ஜிவி பிரகாஷ் பட பாடலை எளிமையாக வெளியிட்ட லைகா..!


ஜிவி பிரகாஷ் பட பாடலை எளிமையாக வெளியிட்ட லைகா..!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தை ரூ. 350 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைக்கா.

இதனுடனே சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ்-ஆனந்தி நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தையும் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பாடல்களை மிக எளிமையான முறையில் இன்று வெளியிட்டது இந்நிறுவனம்.

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் 2.0 படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் தங்கியிருக்கிறார். எனவே, அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கே சென்று இப்படப் பாடல்களை அவரை வைத்து வெளியிட்டுள்ளனர்.

இதில் நான்கு பாடல்களும், ஒரு தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளது. நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.