ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த ரஜினிகாந்த் பட வில்லன்.!


ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த ரஜினிகாந்த் பட வில்லன்.!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.

இதனுடன் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ‘கயல்’ ஆனந்தி, கருணாஸ், நிரோஷா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நாயகன் ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை ரஜினியின் 2.ஓ பட வில்லன் அக்ஷயகுமார் வெளியிட இருக்கிறாராம்.

இதற்காக மே 12ஆம் அவர் சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.