விஜய் படங்களையே குறி வைக்கும் ரஜினியின் வில்லன்..!


விஜய் படங்களையே குறி வைக்கும் ரஜினியின் வில்லன்..!

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா உள்ளிட்டோர் நடித்த தெறி வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்யவுள்ளது.

ஆனாலும், திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்குக்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்ஷய்குமார், இதன் ரீமேக் உரிமையை கைப்பற்றிட இருக்கிறாராம்.

எனவே, விரைவில் இதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

இவர் இதற்கு முன்பே துப்பாக்கி படத்தின் இந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தில் நடித்துள்ளார். மேலும் இவரே விஜய்யின் ‘கத்தி’ இந்தி ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.