அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ‘சைத்தான்’ அலிஷா..!


அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ‘சைத்தான்’ அலிஷா..!

பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து எமன், சைத்தான் படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இதில் சைத்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.

பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கிவரும் இப்படத்தில் அருந்ததி நாயர் மற்றும் அலிஷா அப்துல்லா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனி இசையமைத்து தயாரித்து வருகிறார்.

இதில் நடித்துள்ள அலிஷா அப்துல்லா, அஜித்துடன் நடிப்பதே இவரின் லட்சியம் என்று கூறியிருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம், இவரும் அஜித்தைப் போலவே ஒரு பைக் ரேசர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதர்வாவுடன் இரும்புக் குதிரையில் படத்தில் அலிஷா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.