அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் சரைனொடு ரிலீஸ்..!


அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் சரைனொடு ரிலீஸ்..!

தெலுங்கு சினிமாவின் பிரபல நாயகன் அல்லு அர்ஜுன் மற்றும் அதிரடி ஆக்ஷன் இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு ஆகியோர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘சரைனொடு’.

இதில் அல்லு அர்ஜுனுடன் ராகுல் ப்ரீத்தி சிங், கேத்ரீன் தெரசா, ஆதி, சீனியர் நடிகர் ஸ்ரீகாந்த், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினத்தில் வெளியானது. எனவே, இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் இதன் ரீலீஸ் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்த நாள் வருகிறது. அன்றைய தினத்தில் இப்படத்தை வெளியிடவுள்ளதாக அல்லு அர்ஜுனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார்.