”​டாப் ஹீரோக்களை நம்பி மோசம்போன சமந்தா..?​”​


”​டாப் ஹீரோக்களை நம்பி மோசம்போன சமந்தா..?​”​

சினிமாவில் நுழையும் எந்தவொரு நடிகைக்கும் உள்ள ஆசைதான் சமந்தாவுக்கும் இருந்தது. டாப் ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் அது. அவர் நினைத்தபடியே தமிழில் ஜீவா,​ விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட ஹீரோக்களுடன் ஜோடி​யும்​ சேர்ந்தார்.

இதனால் சில படங்களின் கதையைக்​ கூட பொருட்படுத்தாமல் ஒப்புக் கொண்​டிருக்கிறார். ஆனால் இதில்​ கத்தியைத் தவிர எந்த படமும் சமந்தாவுக்கு கைகொடுக்கவில்லை.​

இவர் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்ததால் இவர் ராசியில்லையோ என்று எண்ணிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் அவர்களின் பார்வையை ஹிட் கொடுக்கும் நடிகைகள் பக்கம் திருப்பிவிட்டார்களாம்.

பெரிய ஹீரோஸ்ன்னு பார்த்தா நம்மள இப்ப பண்ணிட்டாங்களே.. இனிமே இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை. இனி கதையைத்​தான் நம்ப வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டாராம் சமந்தா.

எனவே அனுஷ்கா, நயன்தாரா ஆகியோரை​ப்​ போல் கதையின் நாயகியாக மாற முடிவு எடுத்து, தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் ​சல்லடை போட்டு ​கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார் சமந்தா.

டோண்ட் வொர்ரி சமந்தா .. அதுதான் உங்களைக் காப்பாத்த​ ​ஏ.ஆர்.முருகதாஸ்​​ ​இருக்காரே​??