விஜய் பட வில்லனுடன் டூயட் பாடும் அமலாபால்..!


விஜய் பட வில்லனுடன் டூயட் பாடும் அமலாபால்..!

திருமணத்திற்கு பிறகு தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் அமலா பால்.

திருமணத்திற்கு பிறகும் ஹீரோக்களுடன் இவர் டூயட் பாடி வருவது மற்ற நடிகைகளை டென்ஷன் ஆக்கியுள்ளதாம்.

அது இருக்கட்டும். நாம விஷயத்துக்கு வருவோம்.

தற்போது தனுஷ் தயாரிப்பில் ‘அம்மா கணக்கு’ மற்றும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக கன்னட சினிமாவிலும் கால் பதிக்க இருக்கிறார் அமலாபால்.

நான் ஈ மற்றும் புலி ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டிய சுதீப் உடன் ஜோடியாக நடிக்கிறார். ‘ஹெப்புலி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கன்னட இயக்குனர் கிருஷ்ணன் இயக்குகிறார்.

ராணுவ வீரராக சுதீப், மருத்துவ கல்லூரி மாணவி அமலாபால் நடிக்கின்றனர். அடுத்த மே மாதம் ஷூட்டிங் துவங்குகிறது.