சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் அமலா பால்..!


சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் அமலா பால்..!

மைனா படம் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் நைசாக நுழைந்த அமலா பால், பின்னர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

அதன்பின்னர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனவர் தற்போது செலக்டிவ்வாக சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் இவர்.

மோகன்லாலுடன் இரண்டு படங்களில் நடித்துவிட்டாலும் மம்மூட்டியுடன் நடிக்கவிருப்பது இதுதான் முதன்முறையாகும்.

‘துருப்பு குலான்’, ‘இ பட்டணத்தில் பூதம்’ மற்றும் ‘தப்பன்னா’ ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக மம்மூட்டியுடன் இணைகிறார் இயக்குனர் ஜானி ஆண்டனி..

‘தோப்பில் ஜோப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கபடி வீரராக நடிக்கிறாராம் மம்மூட்டி. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் எனத் தெரிய வந்துள்ளது.