குழந்தைகள் படம் மீது ஆர்வம் காட்டும் அமலாபால்??


குழந்தைகள் படம் மீது ஆர்வம் காட்டும் அமலாபால்??

சூர்யாவுடன் அமலாபால் நடித்த ‘பசங்க 2′ க்குப் பிறகு தனுஷ் தயாரிப்பில் ரேவதியின் மகளாக ‘அம்மா கணக்கு’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் முக்கிய வேடம் ஏற்றுள்ள ‘2 பெண் குட்டிகள்’ என்ற மலையாள படம் இன்று கேரளாவில் வெளியாகியுள்ளது.

இந்தாண்டில் அமலாபால் நடித்து ரிலீஸ் ஆகும் முதல் படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

இப்படத்தில் இரண்டு பள்ளி மாணவிகளின் ஆசை மற்றும் குறும்புகளைக் கவிதையாக படைத்துள்ளார் இயக்குனர் ஜியோ பேபி.

‘பசங்க 2’ போன்று இப்படமும் தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என காத்திருக்கிறாராம் இந்த மைனா.

குழந்தைகளை கவர் பண்ற படங்கள் மீது ஆர்வம் கொள்ளும் அம்மணிக்கு எப்போ குவா குவா மீது ஆர்வமாகுமோ??