கமலுடன் அமலா… ரஜினியுடன் அம்பிகா… திரும்பும் ஹீரோக்கள்.!


கமலுடன் அமலா… ரஜினியுடன் அம்பிகா… திரும்பும் ஹீரோக்கள்.!

கடந்த 1989ஆம் ஆண்டு கமலுடன் ‘வெற்றி விழா’ படத்தில் நடித்தார் அமலா. தற்போது கிட்டதட்ட 27 வருடங்களுக்கு பிறகு ராஜீவ்குமார் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

இவர்களை போல, ரஜினி மற்றும் அம்பிகாவும் 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கவிருக்கிறார்களாம்.

ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிக்க, இதில் அம்பிகாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிவிருக்கிறார்.

ரஜினியும் அம்பிகாவும் 1986ஆம் ஆண்டு வெளியான ‘மாவீரன்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதன்பின்னர் ‘அருணாச்சலம்’ படத்திலும் அம்பிகா கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.