சிம்பு – தமன்னா – அனிருத் கூட்டணியில் அமீரின் ‘மெர்சல்’


சிம்பு  – தமன்னா – அனிருத் கூட்டணியில் அமீரின் ‘மெர்சல்’

‘வாலு’ படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இதனைத் தொடர்ந்து செல்வராகவனின் ‘கான்’, கௌதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் இரவு பகலாக நடித்து வருகிறார் சிம்பு. இவரின் சமீபத்திய பேட்டியில் இனி வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுப்பேன் என தெரிவித்திருந்தார். எனவே அடுத்தடுத்து படங்களை கமிட் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அமீர் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். தற்போது இப்படத்திற்கு ‘மெர்சல்’ எனப்பெயரிட்டுள்ளனர். ஷங்கர் இயக்கி ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ‘ஐ’ படத்தில் இடம்பெற்ற ‘மெர்சலாயிட்டேன்…’ என்ற பாடலில் இருந்து இப்பட டைட்டிலை எடுத்துள்ளனர். விக்ரம் நடித்திருந்த இப்பாடலை அனிருத் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதன்முறையாக சிம்புவுடன் தமன்னா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படம் ரொமான்டிக் ஆக்சன் படமாக உருவாகிறதாம். இப்படத்திற்காக சிம்புவும் அனிருத் இணைந்து ஒரு பாடலை பாடவுள்ளனர்.

அட! படத்தோட டைட்டிலே மெர்சலாக்குதே….