டெல்லி போலீசை திணற வைத்த அமிதாப் மற்றும் தனுஷ்


டெல்லி போலீசை திணற வைத்த அமிதாப் மற்றும் தனுஷ்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தனுஷ் மற்றும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஷமிதாப்’ படத்தின் அறிமுக விழா புதுடெல்லியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்‌ஷராஹாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமிதாப்பச்சன், தனுஷ், அக்‌ஷராஹாசன் ஆகியோரை நேரில் காணவும், அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு முந்தியடித்து சென்றனர். இதனால் ரசிகர்களுக்கிடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரசிகர்களின் அன்பு தொல்லையில் இருந்து அமிதாப், தனுஷ் உள்ளிட்டோரை பத்திரமாக மீட்கவும், அவ்வழியாக முன்னேறி செல்ல முடியாமல் தவித்த வாகன போக்குவரத்தை சரிப்படுத்தவும் டெல்லி போலீசார் திணறி விட்டனர்.