சென்னையை மீட்டெடுக்க புறப்படுவேன்! எமி ஜாக்சன் சபதம்!


சென்னையை மீட்டெடுக்க புறப்படுவேன்! எமி ஜாக்சன் சபதம்!

அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், மீனா மகள் நைனிகா, பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் நாயகியான எமி ஜாக்சன் தன் சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “தெறி படத்திற்காக நாங்கள் கோவாவில் இருக்கிறோம். விரைவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்ப இருக்கிறோம்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மழை வெள்ளம் தாக்கியபோது எங்களால் உதவ முடியவில்லை. வெள்ளம் வடிந்தாலும் சென்னை முழுமையாக மீளவில்லை.

எனவே சென்னையை சீரமைக்க வேண்டிய நிதியை நாங்கள் தருவோம். இதில் அனைவரும் ஒன்றிணைந்து சென்னையை மீட்டெடுப்போம்” என கூறியுள்ளார்.