‘தெறி’ அப்டேட்ஸ்: விஜய்க்கு ஈடு கொடுப்பாரா எமி ஜாக்சன்?


‘தெறி’ அப்டேட்ஸ்: விஜய்க்கு ஈடு கொடுப்பாரா எமி ஜாக்சன்?

அட்லி இயக்கும் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர், முக்கிய கேரக்டரில் சத்யராஜ் மற்றும் சுனைனா நடித்துள்ளனர்.

தற்போதுவரை இப்படத்தின் வசனக் காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்கி வந்த அட்லி, இனி பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறாராம்.

சமீபத்தில்தான் சமந்தாவுடன் விஜய் பாடும் ஒரு குடும்ப பாடல் ஒன்று கோவாவில் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் விஜய்யுடன் எமிஜாக்சன் ஆடும் ஹைடெக் பாடல் ஒன்றை படமாக்கவிருக்கிறார்களாம்.

விஜய்யின் ஆட்டம் நாம் அனைவரும் அறிந்ததே. விஜய்யின் ஆட்டத்திற்கு ஈடுகொடுப்பாரா இந்த ஐ நாயகி என்பதை பார்க்க படம் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.