2.ஓ அப்டேட்ஸ்… ச்சும்மா பறந்து பறந்து அடிக்கும் எமி ஜாக்சன்..!


2.ஓ அப்டேட்ஸ்… ச்சும்மா பறந்து பறந்து அடிக்கும் எமி ஜாக்சன்..!

விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருபவர் எமி ஜாக்சன்.

இவர் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிக்கு ஜோடியாக நடித்து வரும் இவருக்கும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறதாம். இதற்காக இவரது கேரக்டர் டாம்ப் ரைடர் வீடியோ கேமில் வரும் லாரா கிராப்ட் என்கிற கேரக்டரைப் போல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ஆக்ஷன் காட்சிகளுக்கான ஒத்திகையில் எமி ஈடுபட்டு வருகிறார். சண்டை காட்சிகளில் ஹாலிவுட் படங்கள் போல ஆகாயத்தில் பறந்து பறந்து எதிரிகளை அடிக்கவிருக்கிறாராம்.

விரைவில் எமியின் இந்த சாகச சண்டை காட்சிகளை ஷங்கர் படமாக்கவிருக்கிறார்.