விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை ஈசியாக தட்டிய எமிஜாக்ஸன்


விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை ஈசியாக தட்டிய எமிஜாக்ஸன்

கதாநாயகி என்றால் வெள்ளைவெளேர் இருக்கவேண்டும் என்ற ஒரு சினிமா நியதி இருக்க, ஒரு வெள்ளைக்கார பெண்ணே கிடைத்து விட்டால் தமிழ் சினிமாவுக்கு கேட்கவும் வேண்டுமா என்ன? (புரிஞ்சுட்டிச்சா? ஐ நாயகி எமியை பத்திதான் சொல்றோம்)

மதராசபட்டினத்தில் வெள்ளைக்கார பெண்ணாக வந்து நம் நெஞ்சங்களில் வண்ணமிட்டு சென்றவர் எமிஜாக்ஸன். இதற்கு முன்பு நிறைய கதாநாயகிகள் இதுபோல வந்து சென்றாலும், அழகை மட்டுமே காட்டி சென்றனர். ஆனால், அழகுடன் கூடிய நடிப்பையும் தன் முதல் படத்திலேயே வெளிப்படுத்தியவர் இவர்.

லண்டனில் மாடலிங் செய்து கொண்டிருந்த இவரை இயக்குனர் விஜய், நம் மதராசப்பட்டினம் அழைத்து வந்தார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது தாண்டவம் படத்திலும் நடிக்க வாய்ப்பளித்தார்.

சமீபத்தில் வெளியான ஐ படத்தின் மூலம் தமிழகத்தின் சிட்டி மட்டுமில்லாமல் ‘அதுக்கும் மேல’ மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்து விட்டார். படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது எனலாம்.

இந்நிலையில், அட்லி இயக்கும் விஜய் படத்தில் நயன்தாரா விலகியதை அடுத்து, எமியை தேடி வந்தது அந்த வாய்ப்பு. விஜய்க்கு ஜோடியாக நடிக்க பலர் காத்திருக்க அந்த வாய்ப்பை ஈசியாக தட்டி சென்றுவிட்டார் இந்த ‘ஹை’ நாயகி எமிஜாக்ஸன்.