தனுஷ், உதயநிதி, சமந்தா பற்றி எமி ஜாக்சன் என்ன சொன்னார்?


தனுஷ், உதயநிதி, சமந்தா பற்றி எமி ஜாக்சன் என்ன சொன்னார்?

மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமாகி தமிழ் திரையுலகை தன் அழகான நடிப்பால் கவர்ந்து வரும் அயல் தேசத்து அழகு புயல் எமி ஜாக்சன். தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் எமி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“மாடலிங், விளம்பரங்களில் இருந்த என்னை நடிகை ஆக்கியது தமிழ் சினிமாதான். தமிழ் ரசிகர்களை மிகவும் நேசிக்கிறேன். என்னை ஒரு இந்திய பெண்ணாகவே நான் பார்க்கிறேன். சென்னை மற்றும் பாண்டிச்சேரி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

தங்க மகன் படத்தில் தனுஷுடன் நடித்தது ஜாலியான அனுபவம். நடிப்பதற்கு அவர் நிறைய உதவினார். வசனங்களை எழுதி வைத்து படித்த பிறகே நடிக்கிறேன்.

தங்கமகன், தெறி என்ற இரண்டு படங்களில் சமந்தாவுடன் நடித்தேன். அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்.

கெத்துபடத்தில் ஐயங்கார் பெண்ணாக வருகிறேன். அப்படத்திற்காக டைரக்டர் எனது நடை, உடை பாவனை அனைத்தையும் மாற்றி விட்டார். உதயநிதியுடன் நான் நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வருகிறது. ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றார் எமி ஜாக்சன்.