விஜய்க்காக கதை கேட்காமல் நடித்த எமி ஜாக்சன்.!


விஜய்க்காக கதை கேட்காமல் நடித்த எமி ஜாக்சன்.!

மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவுடன் ஜோடியாக நடித்து இந்திய சினிமாவில் நுழைந்தவர் வெளிநாட்டு மாடல் அழகி எமி ஜாக்சன்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரஜினியுடன் 2.0 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னை அறிமுகப்படுத்திதிய இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறாராம்.

பிரபுதேவா மற்றும் தமன்னா இணைந்து நடிக்கும் காந்தா படத்தில்தான் ஒரு வித்தியாசமான வேடத்தை ஏற்கிறாராம்.

தன்னை கோலிவுட்டுக்கு அழைத்து வந்த இயக்குனர் என்பதால், இப்படத்தின் கதையை கூட கேட்காமல் கமிட் ஆகி நடித்தாராம் எமி.