‘நான் ஆசிர்வதிக்கப்பட காரணம் ரஜினி-விஜய்தான்…’ நெகிழும் எமி..!


‘நான் ஆசிர்வதிக்கப்பட காரணம் ரஜினி-விஜய்தான்…’ நெகிழும் எமி..!

விக்ரமின் ஐ, தனுஷின் தங்க மகன் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ரஜினி, விஜய் ஆகிய டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.

விஜய்யுடன் நடித்துள்ள தெறி நாளை ரிலீஸ் ஆகிறது. ரஜினியுடன் 2.0 படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார்.

இருவருடனும் நடித்து வருவது பற்றி சமீபத்திய பேட்டியில் எமி ஜாக்சன் கூறியதாவது…

“சென்ற வாரம் ரஜினி சார், அக்‌ஷய் சார் ஆகியோருடன் நடித்தேன். அவர்களுடன் பணியாற்றுவது மிகப்பெரிய அனுபவம்.

மீண்டும் மே மாதம் 2.0 படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறேன். எனக்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. ஆனால் ரோபோ கேரக்டரில் நடிக்கவில்லை.

நான் மிகவும் வியந்து பார்த்த நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய்தான். இப்போது இருவருடனும் நடித்துவிட்டேன். எனவே நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.