‘தெறி’ ஹிட்டுதான்… ஆனால் எமிக்கு என்ன யூஸ்…?


‘தெறி’ ஹிட்டுதான்… ஆனால் எமிக்கு என்ன யூஸ்…?

தெறி வெளியாகி இரண்டு வாரங்களை கடந்தும் குடும்பங்களின் அமோக ஆதரவுடன் படம் வசூலை ஈட்டி வருகிறது.

இதில் விஜய், மகேந்திரன், சமந்தா, நைனிகா, ராஜேந்திரன் ஆகியோரின் நடிப்பும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், விமர்சகர்களோ ரசிகர்களோ எமி ஜாக்சனை பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை.

மேலும் விஜய்யுடன் எமி ஜாக்சன் நடனமாடிய ராங்கு ராங்கு என்ற பாடலும் படத்தில் இடம் பெறவில்லை.

ஏனோ தானோ என்று படம் முடிந்த பிறகு அந்த பாடலை வைத்துள்ளனர். இதனால் எமிக்கு சற்றே வருத்தமுள்ளதாம்.

இதனால், இனி தன் கேரக்டர் பற்றி முழுமையாக அறிந்துக் கொண்டே பிறகுதான் புதிய படங்களில் கமிட் ஆவேன் என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.