எமி தமிழ் அழகு; அமலாபால் தனி அழகு – ஒளிப்பதிவாளர் சுகுமார்


எமி தமிழ் அழகு; அமலாபால் தனி அழகு – ஒளிப்பதிவாளர் சுகுமார்

பிரபுசாலமன் இயக்கிய ‘கொக்கி’, ‘லாடம்’, ‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சுகுமார். இப்படங்களின் தரமான ஒளிப்பதிவை தொடர்ந்து ‘நிமிர்ந்து நில்’, ‘மான்கராத்தே’, ‘காக்கி சட்டை’ படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி மற்றும் அமலா பால் நடித்து வெளிவந்த ‘ஜன்டா பை கபிராஜீ’ என்ற தெலுங்கு படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார் சுகுமார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் தன்னுடன் பணியாற்றிய நடிகைகள் பற்றி தன் பார்வையில் அவர் தெரிவித்துள்ளதாவது…

“நான் பணியாற்றிய ‘மைனா’ படத்தில் அறிமுக நடிகை போல வந்தார் அமலா பால். அதன்பின்னர் அவருடன் மூன்று முறை இணைந்து பணியாற்றியுள்ளேன். முன்னணி நடிகையான பிறகும் தற்போதும் அதே குணத்துடன் பழகி வருகிறார். இவர் முகத்துக்கு மட்டுமே ஒப்பனை செய்துக்கொள்கிறார். மனதுக்கு ஒப்பனை போடாத அவரது அழகு தனி அழகு.

அதுபோல் இந்திய பெண்களின் முகஅழகை கொண்டவர் எமி ஜாக்சன்.   வெள்ளந்தியாக எல்லாரிடமும் பழகுகிறார். அவர்தான் அழகு என்றால் அவர் பேச முற்படுகிற தமிழ் அதைவிட அழகு” என்றார் சுகுமார்.