‘கயல்’ ஆனந்தியை கழட்டி விடாமல் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..!


‘கயல்’ ஆனந்தியை கழட்டி விடாமல் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..!

தெலுங்கு படங்களில் அறிமுகமானாலும் கயல் படமே ஆனந்திக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கேரியரை உருவாக்கி தந்துள்ளது.

தற்போது தமிழில் பிஸியாக நடித்து வருகிறார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் ஜோடி சேர்ந்தார்.

இதன் வெற்றியைத் தொடர்ந்து, எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்ற படத்திற்காக இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்து வருகிறது.

இதனால் இவர்களது ரசிகர்கள் இந்த ஜோடியை கொண்டாடி வருகின்றனர்

தற்போது மூன்றாவது முறையாக கடவுள் இருக்கான் குமாரு (KIK) என்ற படத்திற்காக இணைகின்றனர்.

ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக அவிகா கோர் நடித்து வந்தார்.

ஆனால் அவரது நடிப்பு திருப்தியில்லாத காரணத்தால், மீண்டும் ஆனந்திக்கே வாய்ப்பை வழங்கலாம் என நாயகன் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.