தனுஷ், விஜய் சேதுபதியுடன் இணையும் ஆண்ட்ரியா..!


தனுஷ், விஜய் சேதுபதியுடன் இணையும் ஆண்ட்ரியா..!

ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரது பாராட்டுகளை தன்னுடைய ‘விசாரணை’ படம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் வெற்றிமாறன்.

இதனையடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ படத்தை விரைவில் தொடங்கவிருக்கிறார். இதில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.

இப்படத்தில் ஜீவாவும் நடிக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுடன் தற்போது ஆண்ட்ரியாவும் இணையவிருக்கிறாராம். இவர் விபச்சாரி கேரக்டரில் நடிக்கிறார்.

இதற்கு முன்பே சிம்பு நடிப்பில் ‘வடசென்னை’ படத்தை இயக்கவிருந்தார் வெற்றிமாறன். அதிலும் ஆண்ட்ரியாவுக்கு விபச்சாரி கேரக்டரே கொடுப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.