அப்போ ஆண்ட்ரியா.. இப்போ எமி… அணைக்கும் அனிருத்..!


அப்போ ஆண்ட்ரியா.. இப்போ எமி… அணைக்கும் அனிருத்..!

கடந்த இரண்டு மாதமாக பீப் பாடல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு தவித்து வந்தார் அனிருத். இதனால் கனடா சென்ற அவர் இந்தியா திரும்பாமல தாமதம் செய்து வந்தார்.

பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தற்போது அடுத்த சர்ச்சையில் தானாகவே வந்து மாட்டிக் கொண்டுள்ளார் அனிருத்.

ரஜினியுடன் ‘2.ஓ’ மற்றும் விஜய்யுடன் ‘தெறி’ ஆகிய படங்களில் நடித்து வரும் எமி ஜாக்சனுடன் அனிருத் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது.

இதனை ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து வருவதால் அடுத்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இது தற்போது டிரெண்டாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அனிருத், நடிகை ஆண்ட்ரியாவை கட்டிபிடித்து உதட்டில் முத்தம் பதித்த புகைப்படங்கள் இணையத்தில் சூட்டை கிளப்பியது தாங்கள் அறிந்ததே.