தனுஷ் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் ‘நோ’ சொல்ல… அனிருத் ‘எஸ்’ சொன்னார்..!


தனுஷ் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் ‘நோ’ சொல்ல… அனிருத் ‘எஸ்’ சொன்னார்..!

தனுஷ் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கி கடந்த வருடம் வெளியான நானும் ரௌடிதான் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அதற்கான கதை விவாதத்தில் அவர் சில மாதங்களாக ஈடுபட்டதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் சிவகார்த்திகேயன் 3 வருடங்கள் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம்.

எனவே, தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன். அஜித் நடித்த வேதாளம் படத்தை தொடர்ந்து, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அட சிவா நோ சொன்னாலும், அவரது நண்பர் எஸ் சொல்லிட்டாரே…