இனிமே எல்லாமே சோனிதான்… அனிருத்தின் அதிரடி முடிவு..!


இனிமே எல்லாமே சோனிதான்… அனிருத்தின் அதிரடி முடிவு..!

கொலவெறி பாடல் மூலம் உலகளவில் பிரபலமானவர் அனிருத்.

வளரும் இசை கலைஞர்களில் முன்னணியில் இருக்கும் இவர், முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாமல் இடம் பெற்று வருகிறார்.

படங்களை தவிர்த்து ‘சான்ஸே இல்ல’, ‘எனக்கென்னா யாரும் இல்லையே’ மற்றும் ‘அவளுக்கென்ன’ உள்ளிட்ட பாடல்களை ஆல்பமாக வெளியிட்டும் வருகிறார்.

இதுபோன்று தனியாக உருவாகும் பாடல்களை இனி சோனி நிறுவனத்திற்காக கொடுக்கவிருக்கிறாராம். அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுவிட்டதாம்.

இது குறித்து அனிருத் கூறுகையில்.. “இது ஆரம்பம்தான். இனி நானும் சோனி நிறுவனமும் இணைந்து ரசிகர்களுக்கு புதிய இசை அனுபவத்தை அளிப்போம்” என்று கூறினார்.