விஜய், அஜித் அடுத்து விக்ரம்; ஆர்டராக வரும் அனிருத்!


விஜய், அஜித் அடுத்து விக்ரம்; ஆர்டராக வரும் அனிருத்!

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தில் இசையமைத்து இருந்தார் அனிருத். விஜய்யை தொடர்ந்து தற்போது சிவா இயக்கும் அஜித் படத்தில் இணைந்திருக்கிறார். இதை முன்பே நாங்கள் தெரிவித்திருந்தோம் அல்லவா. தற்போது இவர்களை தொடர்ந்து அடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்க தயாராகி விட்டார் அனிருத்.

‘கத்தி’ படத்தில் இடம்பெற்ற  ‘தீம் மியூசிக்’ இன்றும் பலரது செல்போனில் ரிங் டோனாக இருந்து வருகிறது. ‘தளபதி’ ரசிகர்களுக்கு ரிங்டோன் அமைத்து விட்ட அனிருத் தல ரசிகர்களை விட்டுவிடுவாரா என்ன? அவர்களுக்கும் ஏற்ற வகையில் தீம் மியூசிக் ஒன்றை  உருவாக்கவிருக்கிறாராம்.

‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் தற்போது நடித்து வரும் விக்ரம் அடுத்து ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அஜித் படத்தின் பாடல்களை முடித்த பின்னர் விக்ரம் நடிக்கும் இந்தப் படத்திற்குதான் அனிருத் இசையமைக்கவுள்ளார்.  இவர்களது கூட்டணி இணைவது இது முதல் முறையல்ல.

ஏ.ஆர். ரகுமான் இசையில் ஷங்கர் இயக்கி, விக்ரம் நடித்து வெளிவந்த ‘ஐ’ படத்தில் ‘மெர்சலாயிட்டேன்…’ என்ற பாடலை அனிருத் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.