சிவகார்த்திகேயனுக்கு 6… நயன்தாராவுக்கு 3… இது அனிருத் கணக்கு..!


சிவகார்த்திகேயனுக்கு 6… நயன்தாராவுக்கு 3… இது அனிருத் கணக்கு..!

3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன போதே தன் நண்பர்கள், தனுஷ், சிவகார்த்திகேயனுடன் பணி புரிந்தவர் அனிருத்.

அதன்பின்னர், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ ஆகிய படங்களுக்கும் அனிருத்தான் இசை.

இந்த 5 படங்களை தொடர்ந்து தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்திற்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

எதிர் நீச்சல் (ஒரு பாடலில் நயன்), நானும் ரெளடிதான் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக நயன்தாரா படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.