புது ஹீரோவுக்கு அனிருத் இசை… காரணம் இதுதானா?


புது ஹீரோவுக்கு அனிருத் இசை… காரணம் இதுதானா?

தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக நடித்தவர் புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது இவரை தொடர்ந்து அதே படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் என்பவரும் நாயகனாக அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கவுள்ள இப்படத்திற்கு ரம் எனப் பெயரிட்டுள்ளனர். இதில் மியா ஜார்ஜ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிக்கிறார். இவர்களுடன் ஒரு மிரட்டலான கேரக்டரில் மலையாள நடிகர் நரேன் நடிக்கிறாராம்.

சில மாதங்களாக ஒரு சில படங்களை இழந்த அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். இப்பட நாயகன் ரிஷிகேஷ் அனிருத்தின் கஸின்பிரதர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத் ஒரு புதுமுக ஹீரோ படத்திற்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.