‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்காக இமான் இசையில் அனிருத்தின் ‘டண்டனக்கா’


‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்காக இமான் இசையில் அனிருத்தின் ‘டண்டனக்கா’

நிமிர்ந்து நில், பூலோகம் படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் படம் ரோமியோ ஜூலியட். ஜெயம்ரவியுடன் ஹன்சிகா இணையும் இப்படத்தில் பூனம்பஜ்வாவும் நடித்து வருகிறார். இவர்களுடன் வம்சிகிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இன்று அதிகம் விரும்புவது குத்துப்பாட்டு. சமீபத்தில் வெளியான தனுஷின் அனேகன் படத்தில் இடம் பெற்ற ‘ டங்கா மாரி ஊதாரி’ பாடலின் மிகப்பெரிய ஹிட்டை தொடர்ந்து, இப்படத்திலும் அவ்வகையான பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அப்பாடலை எழுதிய ரோகேஷ் அவரே இப்பாடலையும் எழுத இமான் இசையில் அனிருத் பாடிய பாடலின் வரிகள் இதோ…

“ டண்டனக்கா
எங்க தல எங்க தல டீ ஆரு
சென்டிமென்ட்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலி”ன்னாரு
அவரு உண்மையா
லவ் பண்ண சொன்னாரு
மச்சான் – அங்க தான்டா
எங்க தல நின்னாரு” என்ற இந்த கானா பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது.

இமான் இசையில் இதற்கு முன்பே ‘என்னமோ ஏதோ’ படத்திற்காக ‘நீயென்ன பெரிய அப்பாடக்கரா?’ என்ற பாடலை அனிருத் பாடியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். மற்ற பாடல்களை தாமரை, மதன்கார்க்கி ஆகியோர் எழுத கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் லக்ஷ்மன். வசனம் சந்துரு கைவண்ணத்தில் உருவாக எஸ்.நந்தகோபால் தயாரித்து இருக்கிறார்.

ஜெயம்ரவி தற்போது நயன்தாராவுடன் தனி ஒருவன் படத்திலும், த்ரிஷா-அஞ்சலியுடன்  அப்பாடக்கரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.