பாடகியாகும் ‘சகலகலா வள்ளிகள்’.. த்ரிஷா மற்றும் அஞ்சலி..!


பாடகியாகும் ‘சகலகலா வள்ளிகள்’.. த்ரிஷா மற்றும் அஞ்சலி..!

தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஹீரோக்கள் தங்கள் சொந்தக்குரலிலேயே பேசி வருகின்றனர். ஆனால் தமிழ் தெரிந்தாலும், சில நடிகைகள் தங்கள் சொந்த குரலில் பேசுவதில்லை.

சமீபகாலமாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்டோர் தங்களுடைய சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார்கள்.

அதுபோல் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள், தற்போது பாடகிகளாக அவதாரம் எடுத்து வருகின்றனர். இதில் ஸ்ருதிஹாசன் தன் படங்களிலும் மற்ற படங்களிலும் நிறைய பாடல்களை பாடியுள்ளார்.

தற்போது இந்த வரிசையில் த்ரிஷாவும் அஞ்சலியும் இணைந்துள்ளனர். த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்து ‘நாயகி’ படத்தில் த்ரிஷாவும், ராம் இயக்கத்தில் மம்மூட்டியுடன் நடித்து வரும் அஞ்சலி, ‘பேரன்பு’ படத்திலும் தலா ஒரு பாடலை பாட இருக்கிறார்களாம்.

இவர்கள் இருவரும் ‘அப்பாடக்கர் சகலகலாவல்லவன்’ படத்தில் இணைந்து நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.