‘போத்திட்டு படுத்துக்கலாமா? படுத்துட்டு..?’ குழப்பத்தில் அஞ்சலி


‘போத்திட்டு படுத்துக்கலாமா? படுத்துட்டு..?’ குழப்பத்தில் அஞ்சலி

சித்தியுடன் சிக்கல், இயக்குனர் களஞ்சியத்துடன் கலகம் என ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கிகொண்டவர் அஞ்சலி. பிஸியான நடிகையாக இருக்கும்போதே சிறிது நாட்கள் காணாமல் போனார். எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று எவருக்கும் தெரியாத நிலையில் இதோ வந்துட்டேன்…. என்று திடீரென்று படங்களில் கமிட் ஆனார் இவர்.

ரீஎன்ட்ரி வட்டத்திற்குள் வந்ததும் ஜெயம் ரவி, த்ரிஷா, சூரி ஆகியோருடன் இணைந்து அப்பாடக்கரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தொடர்ந்து தனது கலகலப்பு பட நாயகன் விமலுடன்  மாப்ள சிங்கம் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது ‘பீட்சா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்ஜிடம் இருந்து அவரின் அடுத்த படமான ‘இறைவி‘ படத்தில் நடிக்க அஞ்சலிக்கு அழைப்பு வந்துள்ளதாம். ‘கதை சொல்லுங்கள், கால்ஷீட் தருகிறேன்’ என்றிருக்கிறார். அதற்கு இயக்குனரோ ‘கால்ஷீட் தாருங்கள், கதை சொல்கிறேன்’ என்றிருக்கிறார்.

இயக்குனர் இவ்வாறாக கூறியதால், போத்திட்டு படுத்துக்கலாமா? இல்ல படுத்துட்டு போத்திக்கலாமா..?  என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் அஞ்சலி.