எதிலும் எப்பவும் வித்தியாசம்… கலக்கப் போகும் கமல்..!


எதிலும் எப்பவும் வித்தியாசம்… கலக்கப் போகும் கமல்..!

தமிழ் படங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்கு கமல்ஹாசனுக்கு உண்டு.

தெனாலி, பாபநாசம் போன்ற கேரக்டர்கள் என்றாலும், அதிலும் வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொண்டு தன்னை வேறுபடுத்திக் காட்ட தவறாதவர்.

நடிக்கும் கேரக்டர் முதல் இயக்கம், தொழில்நுட்பம் என எதிலும் புதுமையை புகுத்தி வருபவர் இவர்.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி, தென்னிந்திய நடிகர் சங்க நிலத்தில், தன் புதுப்படத்தை துவக்கவிருக்கிறார்.

இப்படத்தின் துவக்கவிழாவை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழி சேனல்களில் நேரடியாக ஒளிப்பரப்ப இருக்கிறாராம்.

மேலும் இணையத்திலும் இந்த நேரலையை காட்ட திட்டமிட்டு இருக்கிறார்.

இதுவரை எந்தவொரு படத்தின் விழாவும் இப்படி நேரலையாக வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிகே ராஜீவ்குமார் இயக்கும் இப்படத்தில் கமல் மற்றும் ஸ்ருதி இணைந்து நடிக்கின்றனர். கமலின் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இசை இளையராஜா.

இது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் 41வது படம் என்பது இங்கே நினைவு கூறக்தக்கது.