‘பிரேமம்’ அனுபமா இப்படி பண்ணலாமா..? கலங்கும் தமிழக ரசிகர்கள்..!


‘பிரேமம்’ அனுபமா இப்படி பண்ணலாமா..? கலங்கும் தமிழக ரசிகர்கள்..!

‘பிரேமம்’ படம் வந்து சில வருடங்களை கடந்து போனாலும் அதன் தாக்கம் குறையாது என்றும் குறையாது போலிருக்கிறது. இப்படத்தின் தோன்றிய மூன்று நாயகிகளும் ரசிகர்களின் நெஞ்சங்களில் முத்திரை பதித்துள்ளனர்.

இதில் சுருள்முடி கூந்தல் அழகி அனுபமா பரமேஸ்வரனும் முக்கியமானவர். மலையாளத்தில் ஹிட் கொடுத்துவிட்டார். இனி தமிழ் சினிமா பக்கம் இவரின் கடைக்கண் பார்வை படாதா? என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் இப்போது 3 தெலுங்கில் படங்களில் நடிக்க இருக்கிறாராம் அனுபமா. இவர் பிரேமம் தெலுங்கில் ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டபோது மற்ற இரண்டு படங்களின் வாய்ப்பும் வந்து ஒட்டிக் கொண்டதாம்.

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ‘அ..ஆ’ என்ற படத்திலும் வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் ‘எவடோ ஒக்கடு’ ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

அனுபமா… தமிழுக்கு வருவீங்க பார்த்தா.. என்னம்மா இப்படி பண்ணிறீங்களேம்மா…